Skip to main content

Myanmar - புத்த சன்னியாசிகளின் தாக்குதல் : பீதியில் மியான்மர் முஸ்லிம்கள்!



யங்கூன்:தீவிர தேசியவாதிகளும் கலவரக்காரர்களுமான புத்த சன்னியாசி குழுக்கள் மியான்மரின் தலைநகரான யங்கூனில் தங்களது இனவிரோத நடவடிக்கைகளை வலுப்படுத்தியதை தொடர்ந்து அந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

முஸ்லிம்களை தனிமைப்படுத்தவேண்டும்! அவர்களுடனான உறவை துண்டிக்கவேண்டும்! என்று பிரச்சாரம் செய்து வரும் ’969′ என்ற புத்த சன்னியாசி கும்பல் மியான்மரில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

யங்கூனுக்கு அருகே மத்திய மியான்மரில் உள்ள மிக்தீலா நகரத்தில் கடந்த மாதம் ஏராளமான முஸ்லிம்கள் புத்த சன்னியாசி தீவிரவாதிகளால் கொலைச் செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற ராய்ட்டர்ஸ் செய்தியாளர் இதுத் தொடர்பான செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியதை தொடர்ந்து மிக்தீலாவில் நிலைமை கட்டுக்குள் அடங்கியுள்ளது. ஆனால் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் குடும்பங்கள் பீதியில் ஆழ்ந்திருப்பதாகவும் எந்நேரத்திலும் தாக்கப்படலாம் என அச்சத்துடன் வாழ்வதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் கூறுகிறார்.

முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் தீவிரமடைய போலீஸ் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்றும் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்துப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

ஏப்ரல் 2-ஆம் தேதி ஒரு முஸ்லிம் மதரஸாவில் தீப்பிடித்து 13 மாணவர்கள் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மின்சார உபகரணத்தில் ஏற்பட்ட தீ தான் விபத்துக்கு காரணம் என்று மியான்மர் அரசு விளக்கம் அளித்தது. ஆனால் தீ விபத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக அப்பகுதியில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.

இச்சம்பவத்திற்கு பிறகு அப்பகுதி மக்கள் பயத்துடன் தூங்குவதாகவும் எப்பொழுதும் தாக்குதல் நடக்கலாம் என்ற பீதியில் ஆட்களை நிறுத்தியிருப்பதாக வியாபாரியான முஹம்மது இர்ஷாத் கூறுகிறார்.

’969′ என்ற பெயரிலான தீவிரவாத புத்த சன்னியாசி குழு முஸ்லிம்களுக்கு எதிராக தீவிர பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. அதேவேளையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு உதவும் வகையிலும் வன்முறைகளை எதிர்க்கவும் சில புத்த சன்னியாசிகள் உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து எதிர்கட்சி தலைவரும் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றவருமான ஆங் சாங் சூகி தீவிர மெளனம் பாலித்து வருகிறார். சூகியின் மெளனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியபோதும் அவர் வன்முறைகளை கண்டிக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவோ தயாராகவில்லை.


English Translation

Canniyaci Buddha's attack: Myanmar Muslims in panic!

Yangon: Myanmar's capital Yangon ultra-nationalists kalavarakkara Buddhist canniyaci groups strengthened their inavirota the Muslims living in the country is mired in panic.

Muslims must be lonely! Severed relations with them! 969 to the campaign that has caused panic in Myanmar Buddhist canniyaci gang.

Near the central city of Yangon in Myanmar in the last month of the miktila canniyaci Buddhist and Muslim extremists went to the area following the murder of the journalist told Reuters news report published in this regard.

Following the police action kappattu miktila hastened forth curfew on the situation there under control. But Muslim families living in the area to be attacked at any time by panic and fear in the alntiruppat to live with the Reuters reporter said.

Due to intensify the violence and attacks on Muslims etukkatate police action has already been planned and conducted pattullat News said.

April 2 - matarasa in a Muslim area of ​​the fire incident killed 13 students on the island puts people in fear. Electrical equipment, fire is the cause of the accident was that the Myanmar government. But fire in the area, most Muslims believe that there is some mystery.

The area after the blast people sleep with fear and panic that can happen when people attack நிறுத்தியிருப்பத் Muhammad Irshad said the businessman.

969 'canniyaci Buddhist extremist group called the intensive campaign against Muslims. While the support of Muslims and Buddhists canniyacikal some are opposed violence as a means to help them, according to reports.

Opposition leader and Nobel peace prize for the attacks against Muslims Aung Sang Suu Kyi's income is ultra silent Polyethylene. Suu Kyi's silence on the protests against the international level, he just was not ready kuravo relief to people affected by violence kantikkavo.

Popular posts from this blog

Myanmar : Muslims Situation - BBC tamil

 BBC தமிழ் 10.12.2016 💥  மியன்மார் மக்களின் அவலநிலை உலகில் அதிக துன்புறுத்தலுக்கு ஆலாகும் மியன்மார் முஸ்லீம்கள். 💥  முஸ்லிம்கள் – 10000 வீடுகளுக்கு மேல் தரைமட்டம் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொலை 💥  பௌத்த இனவெறி தீவிரவாத நாய்களே உங்கள் அழிவு காலம் ஆரம்பம் வெகு விரைவில் . 💥  நயந்தராவின் கள்ளக்காதலை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தரம் கெட்ட விபச்சார ஊடகங்களே!!!!! 💥  பர்மாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும் காவித் பௌத்த தீவிரவாதிகளின்... அட்டுழியத்தை வெளியிட ஆண்மை இல்லையா ? ? Play -1:26 Mute Additional Visual Settings Enter Watch And Scroll Enter Fullscreen 47 Shares 893 Views 18 18 Like Like Love Haha Wow Sad Angry Comment Share SUGGESTED VIDEOS விவா...

INDIA - Massive Protest Condemning Hijab Row in Karnataka

  Massive Protest Condemning Hijab Row in Karnataka chennai - 08.02.2021 Speech: N. Al Ameen , State Secretary ,TNTJ

வக்ஃப் வாரிய மசோதாவை எதிர்ப்பது ஏன்?

வக்ஃப் வாரிய மசோதாவை எதிர்ப்பது ஏன்? Credit Sun News 4 4 2025