கோத்ரா முதல் பாட்னா வரை நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் , பாஜகவும் தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா குற்றம்
ான சங்கர் சிங் வகேலா!!! கோத்ரா முதல் பாட்னா வரை நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் , பாஜகவும் தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா குற்றம் சாட்டியிருப்பது ஆர்.எஸ்.எஸ் பாஜக வட்டாரத்தினை கதிகலங்க வைத்திருக்கிறது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ் -பாஜகவிற்கு எதிராக கடும் குற்றசாட்டுகளுடன் முன் வைத்த வகேலா முசாபஃர் நகர் வண்முறையிலும் புத்தகயா குண்டு வெடிப்புகளிலும்,ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்..,கோத்ரா முதல் பாட்னா வரையுள்ள குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஒன்றே ஒன்று தான். அரசியல் ஆதாயம்.இந்துக்களையும் முஸ்லீம்களையும் கொல்லுவது என்பதே அது. அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை பிரிக்க சதி திட்டம் தீட்டுவது பாஜகவின் அரசியல் தந்திரமாகும். குண்டுவெடிப்புகளிலும்,கலவரஙகளிலும் கொல்லப்படும் இந்துக்களை குறித்தோ முஸ்லீம்களை குறித்தோ ஒரு வ ருத்தமும் அவர்களுக்கு இல்லை.அதிகாரத்தை அடைய இந்த மரணங்கள் அவசியம் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பாகும். பாட்னா பிஜேபி பொதுக்கூட்டத்தில் நிக...