Skip to main content

அல் அக்ஸாவில் துப்பாக்கி சூடு! அத்து மீறும் அராஜக யூத அரசு!

 அல் அக்ஸாவில் துப்பாக்கி சூடு! அத்து மீறும் அராஜக யூத அரசு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!
பூர்வீகக்குடிகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களின் அல் அக்ஸா பள்ளி வாசல் அமைந்த புனித பூமியான பலஸ்தீனத்தில் அமெரிக்கா பிரிட்டனின் கூட்டு சதி திட்டத்தில் ஐ.நா.வின் ஆசியோடு குடியேற்றப் பட்டவர்களே இன்றைய இஸ்ரேலில் வாழும் யூதர்கள்!
உலகமுழுவதும் நாடற்ற நாடோடிகளாக சுற்றித் திரிந்த யூதர்கள் 1948 ல் குடியேற்றப்பட்டார்கள்.
அங்கு குடியேற்றப்பட்டு, கால்பதித்த அந்த ஆண்டிலேயே நாசகார யூதக் கூட்டம் 7 லட்சம் பாலஸ்தீனிய முஸ்லிம்களை சொந்த நாட்டிலிருந்து காலி செய்து துரத்தி தனது துரோக வரலாற்றை முதன் முதலில் துவக்கியது..
அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்த யூதர்களால் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்ட அந்த துரோக வரலாறு ”நக்பா” (பேரழிவு) என்று அழைக்கப்படுகின்றது.
அன்றிலிருந்து இன்று வரை ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி சண்டையிலும். சமாதானத்திலும் அதன் ஆக்கிரமிப்பும் அநியாய குடியேற்றமும் தொடர்கதையாகவே உள்ளது.
பிரச்சனையும் பிண்ணனியும்
1948 ஆம் நடந்த இஸ்ரேல்- அரபு நாடுகளின் போரின் போது கிழக்கு ஜெருஸ்ஸலம் ஜோர்டான் கைவசம் வந்தது.
இங்கு தான் முஸ்லிம்களுக்கு முழுதும் சொந்தமான பைத்துல் முகத்தஸ் எனும் அல்மஸ்ஜிதுல் அக்ஸா என்ற புனித பள்ளி வாசல் அமைந்திருக்கின்றது.
இது முஸ்லிம்களுக்கு மூன்றாவது புண்ணிய புனித தலமாகும். இங்கிருந்து தான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணம் அமைந்தது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் அறிவர்.
இந்த புனித பள்ளிக்கு அருகில் அமைந்தது தான் ஷைக் ஜர்ராஹ் என்ற பகுதியாகும்.
1948 ல் அநியாயமாகவும் அக்கிரமமாகவும் வெளியேற்றப்பட்ட 7 லட்சம் முஸ்லிம்களின், 28 குடும்பங்கள் ஷைக் ஜர்ராஹ் பகுதியில் குடியமர்ந்தனர்.
1956 ல் கிழக்கு ஜெருஸ்ஸலம் ஜோர்டான் அரசின் கைவசமிருந்த போது அங்கு அதன் அமைச்சகத்தின் கீழ் தான் இவர்களின் குடியிருப்பு கட்டுமானம் மற்றும் வளர்ச்சிப் பணி நடைப்பெற்றது.
ஐ.நா.வின் நிவாரணப்பணிகளுக்கான முகமை, இவர்களது வீடுகள் கட்டுவதற்குரிய அனைத்து வழி வகைகளை செய்துக் கொடுத்தது. ஆனால் 1967ல் இஸ்ரேல் கிழக்கு ஜெருஸ்ஸலத்தை கைப்பற்றியது.
அதன் பின்னர் ஷைக் ஜர்ராஹ் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் யூத ஜியோனிச அரசு மேற்கொண்டு வருகின்றது.
எங்கள் இன்னுயிர் போனாலும் சரி இந்த அநியாய வெளியேற்றத்தை எதிர்த்து போராடுவோம் என்று பலஸ்தீன மக்கள் தங்கள் இன்னுயிர்களை பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அதன் எதிரொலி தான் அண்மையில் அக்ஸாவில் வெடித்த கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு. ஷைக் ஜர்ராஹ் பகுதியில் சட்டப்பூர்வமாக வசிக்கும் தங்கள் சமுதாய மக்களை வெளியேற்றும் துரோக நடவடிக்கைகளுக்கு எதிராக ! பலஸ்தீன முஸ்லிம்கள் போராடும் வேளையில் புனித ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் புனித பள்ளியில் வந்து தொழுவதை தடுக்கும் வகையில் இறங்கியது.
ஆங்காங்கு சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியது.
இத்தனையையும் தாண்டி முஸ்லிம்கள் புனித ரமளானில், சனி அன்று புனித பள்ளிவாசலில் சுமார் 90 ஆயிரம் எண்ணிக்கையில் கூடினர்.
இஸ்ரேலிய அரசு இதை புனித இரவில் நடக்கும் வணக்கமாக பார்க்காமல் தங்களுக்கு எதிரான ஒரு யுத்தமாக பார்த்தது. ஆம்! உண்மையில் முஸ்லிம்களை ஷைக் ஜர்ராஹ் பகுதியிலிருந்து வெளியேற்றும் தனது நடவடிக்கைக்கு எதிரான யுத்தமாக பார்த்தது.
அதனால் தான் அதை பொறுத்துக் கொள்ள முடியாத மனித குல விரோத இஸ்ரேலிய அரசு தனது காவல் படையை ஏவி பள்ளியில் கூடிய முஸ்லிம்களை வெளியேற்றும் பணியில் களமிறங்கியது. நிலைமை கட்டுமீறிப் போனவுடன்.
அவர்கள் மீது கண்ணீர் புகை வீசியது. உலோகம் தோய்க்கப்பட்ட ரப்பர் குண்டுகளால் சுட்டுத் தள்ளியது.
இதில் 300 பேர்களும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர். பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் இந்த படையினர் தங்களது மூர்க்கத்தனமான தாக்குதலை தொடுத்தனர்.
குறிப்பாக தொழுகையாளிகளின் கண்கள் மீது இந்த ரப்பர் குண்டுகள் பதம் பார்த்து உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை, காயம்பட்டு உயிருக்கு போராடுபவர்களை செம்பிறைச் சங்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் இந்த மனித குல விரோதிகள் அனுமதிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்க கொடுமையாகும்.
இப்படி முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் தனது காட்டுத் தர்பாரை கட்டவிழ்த்த விட்டதற்கு அடிப்படைக் காரணம் ஷைக் ஜர்ராஹ் தான்!
இஸ்ரேல் எரிச்சலுக்கு இன்னொரு காரணம் 1967 ல் இஸ்ரேல் கிழக்கு ஜெருஸ்ஸலத்தை கைப்பற்றிய நாள் திங்கள் கிழமை ஆகும்.
முஸ்லிம்களுக்கு எதிரான அந்த தினத்தை கொண்டாடுவதற்கு யூத அரசு முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களின் இந்த எழுச்சிக் கூட்டம் இஸ்ரேலுக்கு அச்சத்தை ஊட்டியது.
எரிச்சலைக் கொடுத்தது. இது இரண்டாவது காரணமாகும். இஸ்ரேலின் இந்த அராஜகத்தை எதிர்த்து ஹம்மாஸ் இயக்கம் களமிறங்கியது. தீவிர வாதிகள் என்ற பெயரில் காஸா நகரின் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் குண்டு மழைப் பொழிகின்றது. இதில் 28 பேர்கள் பலியாகியுள்ளனர்.
ஷைக் ஜர்ராஹ் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களின் அநியாய வேளியேற்றம், புனித பள்ளி வாசலில் ரமளான் மாதத்தில் தொழுகைக்கு கூடிய முஸ்லிம்கள் மீது ரப்பர் குண்டு கண்ணீர் புகை வீச்சு, இப்போது காஸா நகரில் குடியிருப்புப் பகுதியில் விமானப்படைத் தாக்குதல் என்று இஸ்ரேல் தொடரும் அராஜக அடாவடித்தனமான அராஜக நடவடிக்கைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.
”உங்கள் இறைவன் உங்களுக்குக் கருணை காட்டலாம். நீங்கள் மீண்டும் (அநியாயம் செய்யத்) திரும்பினால் நாமும் (தண்டிப்பதற்குத்) திரும்புவோம். இறைமறுப்பாளர்களுக்கு நரகத்தையே சிறையாக ஆக்கியுள்ளோம்” 17:8 என்று பனூ இஸ்ராயீலுக்கு விடுக்கும் எச்சரிக்கையை இஸ்ரேலிய அரசுக்கு நினைவூட்டிக் கொள்கின்றோம்.
அத்துடன் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பலஸ்தீனிய முஸ்லிம்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.


Popular posts from this blog

Myanmar : Muslims Situation - BBC tamil

 BBC தமிழ் 10.12.2016 💥  மியன்மார் மக்களின் அவலநிலை உலகில் அதிக துன்புறுத்தலுக்கு ஆலாகும் மியன்மார் முஸ்லீம்கள். 💥  முஸ்லிம்கள் – 10000 வீடுகளுக்கு மேல் தரைமட்டம் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொலை 💥  பௌத்த இனவெறி தீவிரவாத நாய்களே உங்கள் அழிவு காலம் ஆரம்பம் வெகு விரைவில் . 💥  நயந்தராவின் கள்ளக்காதலை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தரம் கெட்ட விபச்சார ஊடகங்களே!!!!! 💥  பர்மாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும் காவித் பௌத்த தீவிரவாதிகளின்... அட்டுழியத்தை வெளியிட ஆண்மை இல்லையா ? ? Play -1:26 Mute Additional Visual Settings Enter Watch And Scroll Enter Fullscreen 47 Shares 893 Views 18 18 Like Like Love Haha Wow Sad Angry Comment Share SUGGESTED VIDEOS விவா...

Northern Iraq air strikes: US targets HQ of Popular Mobilisation Forces credit al jazeera , 24 3 2026

Northern Iraq air strikes: US targets HQ of Popular Mobilisation Forces credit al jazeera , 24 3 2026

UK: No Relation with isis at Islam

பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுள்ள தெரசா மே அவர்கள் இஸ்லாமியர்களின் புனித குரானின் வசனங்களை வாசித்து காட்டி இஸ்லாத்திற்கும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்கள் மேலும் பல அப்பாவி முஸ்லீம்களைக்கொல்லும் இந்த ஐ எஸ் தீவிரவாதிகள் முஸ்லீம்களே இல்லை என்று தெரிவித்துள்ளார்கள் ..!! thanks to : http://kaalaimalar.net/america-not/