Skip to main content

இந்திய முஸ்லிம்களும் - சர்வதேசமும் விழித்துக்கொள்ளவேண்டும்

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு, அடக்குமுறைக்கும் , முஸ்லிம்கள் ஆதரவு உள்ளதாக ஒரு மாயா தோற்றத்தை உருவாக்கவே, ஆர் எஸ் எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டது முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் , இது ஆர் எஸ் எஸ்-சின் கிளையமைப்பு, முஸ்லிம்கள் போல் உள்ள போலி முஸ்லிம்களை கொண்டு இயங்கப்படுகிறது.


இது rss அமைப்பின் ஒரு கிளையான MRM உடைய ஆட்கள்.


இந்த அமைப்பின் நோக்கம் இஸ்லாமியர்களே தங்களது செயல்களை ஆதரிக்கிறார்கள் என்ற மாயையை மக்களிடம் பரப்புவதற்குத்தான்.


MRM பற்றிய விழிப்புணர்வை நமது சமூகத்தில் ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.


 முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் 

( MRM)ஒரு பார்வை 


▪️முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்பை சீர்குலைத்து இந்துத்துவ சித்தாந்தத்தையும், கலாச்சாரத்தையும் முஸ்லிம் சமூகத்திற்குள் திணிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட பேராபத்தான ஒரு அமைப்புதான் முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச்.


▪️2002 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதியன்று டெல்லியில் வைத்து முதலில் ராஷ்டிரபதி முஸ்லிம் அந்தோளன் என்ற அமைப்பை உருவாக்குகின்றனர்;ராஷ்டிரபதி என்று ஆரம்பிப்பதால் முஸ்லிம்கள் இதனை ஒதுக்க ஆரம்பித்தனர்.


▪️இதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் பெயர் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்று பெயர் மாற்றப்பட்டு மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி இந்திரேஷ்குமார் இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.


▪️தமிழகத்தில் இந்த அமைப்பு 2007ஆம் ஆண்டு முதல் தன்னுடைய வேலையை வேகமாக துவக்கியது.


▪️2017ஆம் ஆண்டுமுதல் இந்த அமைப்பின் மாநில தலைவராக சென்னையை சேர்ந்த பாத்திமா அலி,மாநில துணைத் தலைவராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரைசுதீன்,மாநில பொதுச்செயலாளராக வேலூரைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளராக சென்னையை சேர்ந்த சலாஹுத்தீன் என்பவரும் செயல்படுகின்றனர்.


 அமைப்பின் செயல்பாடுகள் 


👉 அரசு நலத்திட்டங்களை வைத்து பெண்களையும், மாணவர் சமூகத்தையும் தன் வயப்படுத்துவது.


👉 மஹல்லா கட்டமைப்புக்குள் ஊடுருவி குழப்பங்களை உண்டாக்குவது.


 👉இஸ்லாமிய ஷரீஅத்திற்கு எதிரான ஃபாசிசவாதிகளின் செயல் திட்டங்களுக்கு ஆதரவு நிலையை உண்டாக்குவது.


👉 இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை கையகப்படுத்த அதன் பொறுப்பாளர்களை தங்களது ஆதரவாளர்களாக மாற்றுவது. 


👉ஃபாசிசவாதிகளின் அஜண்டாக்களை நடைமுறைப்படுத்த முழு ஒத்துழைப்புகளை தருவது.


👉 இவை அனைத்தையும் செய்வதன் வழியே முஃமின்களின் ஈமானில் பாதிப்பை ஏற்படுத்துவது.


👉மோடி பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் சார்பாக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றுள்ளன.


👉பா.ஜ.க வின் இல்லந்தோறும் தாமரை என்ற பிரச்சாரம் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் சார்பாக பல இஸ்லாமியர்களின் வீடுகளில் நடத்தப்பட்டுள்ளன.


👉விநாயகர் சதுர்த்திக்காக முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் சார்பாக இந்துக்களுக்கு விநாயகர் சிலைகள் பரிசளிக்கும் நிகழ்வுகளும்,விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளன.


👉பாபர் மஸ்ஜிது தீர்ப்பு பிறகு ராமர் கோவில் கட்டுவதற்காக வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிகளும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன.


👉2018 ஆம் ஆண்டு பசு பாதுகாப்பிற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்-ன் தேசிய நிர்வாகி பயாஸ் அலி என்பவர் நடைபயணம் மேற்கொண்டார்;இந்த பயணத்தின் இறுதி நிகழ்ச்சி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் வைத்து பெற்றது;இதே பயாஸ் அலி தற்போது சட்டீஸ்கரிலிருந்து அயோத்தி வரை ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.


இவற்றிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க இந்த அமைப்பின் விபரீதத்தை ஆலிம் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லி அதன் வழியே முஸ்லிம் சமூகத்தையும், அவர்களது ஈமானிய உணர்வுகளையும் பாதுகாப்பது நம் அனைவரின் மீதும் உள்ள பொறுப்பாக உள்ளது;இதற்கான பிரச்சாரத்தை முழுவீச்சில் நடைமுறைப்படுத்தி ஷரீஅத்தின் கண்ணியத்தை பாதுகாக்க முழு முயற்சிகளை மேற்கொள்வோம்; இன்ஷா அல்லாஹ்!

#BanMrm #Banmuslimrastriyamunch

Source: twitter 










Popular posts from this blog

Myanmar : Muslims Situation - BBC tamil

 BBC தமிழ் 10.12.2016 💥  மியன்மார் மக்களின் அவலநிலை உலகில் அதிக துன்புறுத்தலுக்கு ஆலாகும் மியன்மார் முஸ்லீம்கள். 💥  முஸ்லிம்கள் – 10000 வீடுகளுக்கு மேல் தரைமட்டம் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொலை 💥  பௌத்த இனவெறி தீவிரவாத நாய்களே உங்கள் அழிவு காலம் ஆரம்பம் வெகு விரைவில் . 💥  நயந்தராவின் கள்ளக்காதலை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தரம் கெட்ட விபச்சார ஊடகங்களே!!!!! 💥  பர்மாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும் காவித் பௌத்த தீவிரவாதிகளின்... அட்டுழியத்தை வெளியிட ஆண்மை இல்லையா ? ? Play -1:26 Mute Additional Visual Settings Enter Watch And Scroll Enter Fullscreen 47 Shares 893 Views 18 18 Like Like Love Haha Wow Sad Angry Comment Share SUGGESTED VIDEOS விவா...

INDIA - Massive Protest Condemning Hijab Row in Karnataka

  Massive Protest Condemning Hijab Row in Karnataka chennai - 08.02.2021 Speech: N. Al Ameen , State Secretary ,TNTJ

வக்ஃப் வாரிய மசோதாவை எதிர்ப்பது ஏன்?

வக்ஃப் வாரிய மசோதாவை எதிர்ப்பது ஏன்? Credit Sun News 4 4 2025