17 3 2022 வாஷிங்டன்: கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை அம்மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளியுறவுத்துறை குழு தலைவர் கிரிகோரி மீக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து கல்லூரி செல்வதற்கான பிரச்சனை வெடித்தது. அந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் விவாதப்பொருளாகி சர்ச்சைகளை உருவாக்கியது. கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவிகள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நீதிம...