இதனிடையே, ராணுவத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கும் மியான்மர் மக்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை அப்புறப்படுத்தி வருகிறது. இருப்பினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருகிறது. இது வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மர் ராணுவத்தின் இந்த செயலுக்கு, அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மியான்மர் உள்நாட்டு கலவரத்தால், அந்நாட்டு மக்கள் சிலர் இந்தியாவிற்கும் அடைக்கலம் நாடி வருவதாக தகவல் வெளியானது. தகவலை அடுத்து, மியான்மரில் இருந்து வருவோர்க்கு அடைக்கலம், உணவு உள்ளிட்டவைகளை வழங்கக் கூடாதென அந்நாட்டுடன் இந்திய எல்லைகளை பகிர்ந்துள்ள மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியது. மத்திய உள்துறையின் அறிவுறுத்தலை அடுத்து, மணிப்பூர் மாநிலத்தின் 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு அம்மாநில அரசு அக...