2020ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இருந்து இலங்கை விலகியது. இந்த பேரவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நிகழ்ந்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் இலங்கை இந்த முறை மீண்டும் ஒரு தீர்மானத்தை எதிர்கொள்கிறது. இலங்கை இந்த தீர்மானத்திற்கு எதிராக ஆதரவை திரட்டும் வகையில் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. அப்போது சக்தி வாய்ந்த நாடுகளின் தேவையற்ற தலையீடு என்றும் விவரித்துள்ளது. இது எவ்வாறாக சென்றாலும், தீர்மானம் இந்திய – இலங்கை உறவிலும், இந்தியாவிற்குள் தமிழகத்தில் நடைபெறும் தேர்தலிலும் எதிரொலிக்கும். ஐநா மனித உரிமைகள் அறிக்கை ஜனவரி 27ம் தேதி அன்று மனித உரிமைகள் பேரவையில், ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பிற்கான ஹை கமிஷ்னர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இந்த வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை நிவர்த்தி செய்ய இலங்கை தவறியது. மேலும் அது நாட்டை ஒரு ஆபத்தான பாதையில் கொண்டு செல்கிறது. இது முந்தைய நிலைமைக்கு வழிவகுத்த கொள்கைகள் ம...