இந்தியாவில் உள்ள சிறைகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொதுப்பிரிவினர், உயர் சாதியினர்களோடு ஒப்பிடுகையில், தலித்கள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்கள் அதிகளவில் இருப்பதாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டின் தகவலின்படி, குற்றவாளிகளைவிட விசாரணைக்கைதிகளாக அதிகளவில் முஸ்லீம்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். 2019ம் ஆண்டின் தகவலின்படி, நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் 21.7 சதவீதத்தின் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். விசாரணைக்கைதிகளாக 21 சதவீத தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். 2011ம் ஆண்டில் நிகழ்த்தபட்ட கணக்கெடுப்பில், இது 16.6 சதவீதமாக இருந்தது. பழங்குடியின மக்கள் தொகையில், 13.6 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், 10.3 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர். 2011 கணக்கெடுப்பின்போது இது, 8.6 சதவீதமாக இருந்தது. இந்திய மக்கள்தொகையில் 14.2 சதவீதம் உள்ள முஸ்லீம்களில், 16.6 சதவீதம் பேர் குற்றவாளிகளாகவும், 18.7 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் சிறைகளில் உள்ளனர். நாட்டில் நீதித்துறை எப்போதும் ஏழை மக்களுக...