Skip to main content

Posts

Showing posts from July, 2020

INDIA : கொரோனா வைரஸ்: போலிச் செய்திகளால் இந்தியா கொடுக்கும் விலை

படத்தின் காப்புரிமை GETTY IMAGES தவறான கண்ணோட்டங்களை அளிக்கக்கூடிய செய்தியோ, போலிச் செய்தியோ, யாரை இலக்காக கொண்டு வெளிவருகிறதோ, அவர்களுக்கு பெரிய ஆபத்தை அதனால் உருவாக்க முடியும். கொரோனா தொற்று பரவிவரும் இந்த காலத்தில், உண்மையான பல செய்திகள், இணையத்தில் சரிபார்க்கப்படாமல் வெளியாகும் ஏகப்பட்ட தகவல்களால் நசுக்கப்படுகின்றன. இது இந்தியாவில் குறிப்பாக முக்கிய பிரச்சனையாக உள்ளது. இவ்வாறு வெளிவரும் தவறான தகவல்கள், சிறுபான்மை இன, மத மக்களுக்கு அதிக பின்விளைவுகளை ஏற்படுத்துவதோடு, இறைச்சி வியாபாரம் போன்ற குறிப்பிட்ட சில தொழிற்துறையையும் பாதிக்கின்றன. பிபிசியின் உண்மை கண்டறியும் குழு, இவ்வாறு வெளியாகும் சில தவறான தரவுகள் எந்த அளவிற்கு உள்ளன என்பதையும், இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள சிலர் குறித்து கண்டறிந்துள்ளது. இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவ, மதரீதியிலான போலித்தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், இது சற்று அதிகமாகவே கவனிக்க வைத்துள்ளது என்று கூறலாம். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில், இந்தியாவின் ஐந்து உண்மைத் தன்னை ...

CHINA சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் அரசு

படத்தின் காப்புரிமை KEVIN FRAYER சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன என அந்நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. சீனா தொடர்பான வல்லுநர் அட்ரியன் ஜென்ஸ் எழுதி வெளியிட்ட இந்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, இது குறித்து ஐக்கியநாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என சர்வதேச அழுத்தம் பிறந்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ளவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறி மறுக்கிறது சீனா. ஏற்கனவே உய்குர் முஸ்லிம்களை நன்னடத்தை முகாம்களில் தங்கவைத்திருப்பதற்காக சீனா பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மறுகல்வி முகாம்கள் என்று அரசு அழைக்கிற இந்த முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் சுமார் 10 லட்சம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டதையே சீனா மறுத்தது. ஆனால் ஜின்ஜியாங்கில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முகாம்களை அமைத்ததாக பிறகு ஒப்புக்கொண்டது. இவ்வாறான கொடூர ந...