நியூயார்க்(07 பிப் 2017): ரோஹிங்கியா முஸ்லிம்களில் குழந்தைள் பர்மிய ராணுவத்தினரல் கொடூரமாக கொலை செய்யப்படுவதாகவும் பெணகள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதாகவும் ஐ.நா. அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. பர்மிய இராணுவத்தால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வரும் வேலையில் ஐ.நா. வெளியிட்டுள்ள இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்மாவிலிருந்து அகதிகளாக பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள முஸ்லிம்களிடம் பெறப்பட்ட தகவலின்படி ஐ.நா.இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஐந்து வயது சிறுமி தன்னை ஒரு பர்மிய ராணுவ வீரன் கற்பழிக்க முயல்வதிலிருந்து தற்காத்துக்கொண்டதால் அவள் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டதாகவும் எட்டு மாத கைக்குழந்தையுடைய ஒரு தாயை ஐந்து இராணுவ வீரர்கள் கூட்டு பலாத்காரம் செய்யும் போது கொன்றதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. தன் தாய் மற்றும் சகோதரிகளுக்கு நிகழ்ந்த கொடூரங்களை நேரில் கண்ட 14 வயது சிறுமி, தனது தாய் பர்மிய இராணுவத்தினரால் கூட்டு கற்பழிப்பு செய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டதையும் 8 மற்றும் 10 வயது நிரம்பிய தனது சகோதரிகள் கத்தியால்...