1997 நவம்பர் படுகொலை நினைவுநாள் கோவையில் ஷஹீதான 19 முஸ்லிம்கள் 1997 நவம்பர் 30 தொடங்கி மூன்று நாட்களில் கோயம்புத்தூரில் காவி சிந்தனை கொண்ட பல போலீசாரும் ஆர்எஸ்எஸ் இந்துமுன்னணி பயங்கரவாதிகளும் கூட்டாக இணைந்து 19 முஸ்லிம்களை கொலை செய்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களையும் வீடுகளையும் கொள்ளையடித்து தீக்கிரையாக்கி ஒரே நாளில் அவர்களை தெருவில் நிறுத்தினார்கள் .கோவை அரசு மருத்துவமனையில் வைத்து அர்ஜூன் சம்பத் தலைமையிலான மதவெறி கும்பல் போலீசாரின் முன்னிலையிலேயே 4 முஸ்லிம் இளைஞர்களை படுகொலை செய்தார்கள் .19 முஸ்லிம்களை படுகொலை செய்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை .கோவையில் மட்டுமல்ல போலீசார் துணையோடு ஆர்எஸ்எஸ் சங்பரிவார் தீவிரவாதிகள் நடத்திய படுகொலைகளில் 1969 அக்டோபரில் குஜராத் அகமதாபாத்தில் சுமார் 660 முஸ்லிம்களும் 1983 பிப் 18 அன்று அஸ்ஸாம் மாநிலம் நெல்லியில் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் 1987 ஏப்ரல் 22 அன்று மீரட் நகர் ஹாஷிம்புராவில் 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் 1989 அக்டோபர் 24 அன்று பீகார் மாநில பாகல்பூரில் சுமார் 2000 க்கும் மேற்பட...